

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் 25-வது நினைவு தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் தொண்டர்களிடையே சோனியா பேசியதாவது:
அடிப்படை கொள்கைகளை உடைத்துவிட்டு பெறும் வெற்றி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. எனவே கொள்கைகளை விட்டு விடாதீர்கள். எந்த தோல்வியும் நிரந்தரமாக தொடராது.
ராஜீவ் காந்தி சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் ஈடு செய்யும் வகையில் இந்திய மண்ணில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும். ராஜீவின் எளிமை, புதுமை சிந்தனை, நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இது தான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். இவ்வாறு அவர் பேசினார்.