உணவு விடுதி நடத்தும் தாவூத் கூட்டாளி

உணவு விடுதி நடத்தும் தாவூத் கூட்டாளி
Updated on
1 min read

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய சகாக் களுள் ஒருவரான தாவூத்பாய் படேல் (எ) ஜாவேத் சிக்னாவின் மகன் ‘கஃபே ஈகினாக்ஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார்.

கராச்சியிலுள்ள அந்த உணவு விடுதி, ஜாவேத் குடும்பத்தின் நியாயமான வருமான ஆதாரமா என்பது தெளிவாக இல்லை. அது, நிழலுலக செயல்பாடுகளுக்கான போர்வை என என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பரூச் இரட்டைக் கொலை வழக்கில் தேசிய புல னாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஜாவேத் சிக்னா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இரு முகவரிகளில் இருப்பதாக குறிப் பிடப்பட்டுள்ளது. அதில் ஒன்று, தாவூத் இப்ராஹிம் வசிக்கும் கராச்சியிலுள்ள டி13, பிளாக் 4, கிளிஃப்டன் முகவரியாகும். மற்றொரு முகவரி, டி5, மியான்மர் ஆர்கேட், குல்சன் இ இக்பால், குல்சன் சைக்யாட்ரிக் மருத்துவ மனை, கராச்சி என குறிப்பிடப் பட்டுள்ளது.

பரூச் கொலை வழக்கில் ஜாவேத் இருமுறை ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். முதலில் மும்பையிலும், இரண்டாவது முறை சூரத்திலும் ஆயுதங்கள் கைமாற்றப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in