இந்தியாவில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 15,447பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 15,447பேர் குணமடைந்தனர்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு தொற்று உறுதியானது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,36,69,850 ஆனது.

கடந்த 24 மணி நேரத்தில், 15,447பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,30,11,874 ஆனது.

நாடுமுழுவதும் தற்போது 1,32,457 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக கடந்த 24 மணணிநேரத்தில் 45 பேர் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,519 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,15,068 டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நாடுமுழுவதும் இதுவரை 199.12 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in