

தனது தலைமையிலான புதிய அரசின் 30 நாள் பணி மன நிறைவு தருவதாக தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஜூன் 26-ந் தேதியுடன் 1 மாதம் நிறைவடைந்தது. இது பற்றி வலைப்பூவில் மோடி தெரிவித்த கருத்து வருமாறு:
எனது நோக்கங்களையும் நாட்டில் ஆக்கபூர்வ மாற்றம் கொண்டு வருவதில் எனக்கு உள்ள நேர்மையையும் சரியானவர் களுக்கு சரியான நேரத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் டெல்லியில் நான் எதிர்கொண்டு வரும் சவால். இதற்கு அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும். இந்த மாற்றங்கள் ஆட்சி அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவை.
எதிர் வரும் ஆண்டுகளில் இந்தியாவை உச்சத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதே எனது லட்சியம். யாரையும் குறை கூற விரும்ப வில்லை. எனது நம்பிக்கையும் மன உறுதியும் பல மடங்கு அதி கரித்துள்ளது. இதற்கு முந்தைய அரசுகள் 67 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் இருந்துள்ளன. அதோடு ஒப்பிட்டால் நான் நிறைவு செய்துள்ள ஒரு மாதம் வெறும் பூஜ்ஜியம். ஆனால், இந்த ஒரு மாதத்தில் எமது குழு ஒவ்வொரு நொடியையும் மக்கள் நலன் மீதே கவனம் செலுத்தியுள்ளது.
ஒவ்வொரு புதிய அரசுக்கும் எனது பத்திரிகை உலக நண்பர் கள் சொல்வதுபோல் தேனிலவு காலம் என்று உள்ளது. முந்தைய அரசுகள் இந்த தேனிலவு காலத்தை 100 நாள்களுக்கு மேலும் நீடித்து சுகத்தை அனுபவித்துள்ளன. என்னைப் பொருத்தமட்டில் இத்தகைய தேனிலவு என்ற சுகபோகம் கிடையாது.
ஆட்சியில் அமர்ந்த 100 மணி நேரத்திலேயே குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்தன. நாட்டுக்கு சேவை செய்வதை லட்சியமாக கொண்டு பணியாற்றும் ஒருவருக்கு இந்த சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் பெரிதல்ல. மக்களின் ஆதரவும் அரவணைப்பும் எனக்கு முழுமை யாகக் கிடைக்கிறது. அதனால் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணம்தான் மேலோங்குகிறது.
39 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் நாட்டில் அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம், நாடு சந்தித்த இருண்ட ஆட்சிக் காலங்களில் தனி முத்திரை பெற்று மனதை விட்டு அகலாமல் நிற்கிறது. அப்போது பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், எதிர்க்கட்சிகள் நசுக்கப்பட்டன.
ஆனால், இத்தகைய சுதந்திரங் களை கட்டிக்காத்திட உறுதி அளிக் கிறேன். நல்லாட்சிக்கு உதவும் வலுவான அமைப்புகள் ஏற்படுத்தப்படும். அமைச்சரவை சகாக்கள், முதல்வர்கள், அதிகாரிகளுடன் நான் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளேன். இன்னும் மேம்பாடு காண வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இவ்வாறு மோடி தனது வலைப் பூவில் எழுதியுள்ளார்.