என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதில் ஒருவர் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கைசர் கோகா என தெரியவந்துள்ளது. மற்றொருவரை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. மேலும் அப்பகுதியில் இருந்து 2 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in