மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு - இன்று விசாரணை

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு - இன்று விசாரணை
Updated on
1 min read

எம்.பி.பி.எஸ்., மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழகம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களின் மனுக்களை உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங் களைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. அதில், ஏற்கெனவே அக்கல்லூரிகள் சார்பில் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அட்டவணைப்படி அவற்றை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இம்மனுக்கள் இன்று விசாரிக்கப்பட உள்ளன.

மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம் மற்றும் கே..கே. வேணுகோபால் உள்ளிட்டோர் இதுதொடர்பாக புதிதாக மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலை மையிலான அமர்வு, “இம்மனுக்கள் செவ்வாய்க்கிழமை (இன்று) உரிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக் காக கோபால் சுப்பிரமணியம் ஆஜரானார். கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரப்பில் வேணுகோபால் ஆஜரா னார். அதேபோல ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இம்மனுக்கள், நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளன.

முன்னதாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், கர்நாடக மருத்துவக் கல்லூரி கூட்டமைப்பு, வேலூர் சிஎம்சி உள்ளிட்ட சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றின் ஆட்சேபணையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலை (எம்சிஐ) மேற்பார்வை செய்ய மூவர் குழுவை உச்ச நீதி மன்றம் நேற்று நியமித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in