

குஜராத் சோமநாதர் கோயி லுக்கு மும்பையைச் சேர்ந்த குடும்பத்தினர் 40 கிலோ தங்கம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சோமநாதர் அறக்கட்டளை செயலாளர் பி.கே. லகேரி கூறும்போது, “மும்பையைச் சேர்ந்த திலீப்பாய் லக்கி என்ற வைர வியாபாரியின் குடும்பத்தினர் கடந்த 8-ம் தேதி கோயிலில் 40.27 கிலோ தங்கம் காணிக் கையாக செலுத்தி சிவ பெருமானை வழிபட்டுச் சென்றனர். இதனுடன் சேர்த்து இக்குடும்பத்தினர் கடந்த 3 ஆண்டுகளில் 100 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ரூ.30 கோடி மதிப்பிலான 100 கிலோ தங்க ஆபரணங்களை கோயிலின் பல்வேறு சன்னதிகளில் பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.
இந்த சிவன் ஆலயம், 12 ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது ஆகும்.