Published : 24 May 2016 10:39 AM
Last Updated : 24 May 2016 10:39 AM

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ரூ.2,100 கோடி நன்கொடை வசூல்

தேர்தல் செலவுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ரூ.2,100 கோடி வரை நன்கொடை வசூலித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2004 முதல் 2015 வரை நடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பெற்ற நன் கொடைகள் குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) ஆய்வு செய்து வெளியிட்ட அறிக் கையில் கூறப்பட்டிருப்ப தாவது:

கடந்த 2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலின்போது தான் மிக அதிக அளவில் அரசியல் கட்சிகள் நன் கொடை வசூலில் ஈடுபட்டன. அந்த காலக்கட்டத்தில் மட்டும் 55 சதவீதம் (சுமார் ரூ.1,300 கோடி) காசோலை யாகவும், ரூ.1,039.06 கோடி ரொக்க மாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மக்களவை தேர்தலி லும் அரசியல் கட்சிகள் 83 சதவீத அளவுக்கு செலவழித்துள்ளன. அதாவது ரூ.2,044.67 கோடி வாரி இறைக்கப்பட்டுள்ளது.

2004 மற்றும் 2015 காலக்கட் டத்தில் நடந்த மாநில சட்டப்பே ரவை தேர்தலில் காசோலையாக ரூ.1,244.86 கோடி வசூலிக்கப்பட் டுள்ளது. இதில் செலவான தொகை 65 சதவீதமாகும்.

மக்களவை தேர்தலின்போது சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட மாநில கட்சிகள் வசூலித்த மொத்த நன்கொடை ரூ.267.14 கோடி. இதில் அதி கபட்சமாக சமாஜ்வாதி ரூ.118 கோடி வசூலித்து ரூ.90.09 கோடி செலவழித்துள்ளது. இதில் ஆம் ஆத்மி 2-வது இடத்தில் உள்ளது. இக்கட்சி ரூ.51.83 கோடி வசூ லித்துள்ளது. அதிமுக ரூ.37.66 கோடி வசூலித்து 3-வது இடத் தில் உள்ளது.

இதே போல் சட்டப்பேரவை தேர்தலுக்காக உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ரூ.186.8 கோடி வசூலித்து, ரூ.96.54 கோடி செலவழித்துள்ள து. இதுவரை 2 சட்டப் பேரவை தேர்தல்களை மட்டுமே சந்தித்த ஆம் ஆத்மி ரூ.38.54 கோடி வசூலித்து ரூ.22.66 கோடி செலவழித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x