வாக்குச்சாவடியில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

வாக்குச்சாவடியில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
Updated on
1 min read

மேற்குவங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மற்றும் கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று கடைசி மற்றும் 6-ம் கட்டத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ராம்நகர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட ஒரு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதை யொட்டி போலீஸார் அங்கு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பள்ளி வளாகத்தில் 4 வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப் பட்டது. உடனடியாக அதனை பறிமுதல் செய்து செயலிழக்க வைத்தனர். அந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in