

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடுமை யான வறட்சி நிலவுகிறது. பாதிப்பு குறித்து உரிய தகவல்களை மாநில அரசு வெளியிடவில்லை என்றும், உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இம்மனுக்கள் மீதான விசாரணை யின் போது, மாநிலத்தில் 29,000 கிராமங் கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்ப தாக மாநில அரசு தெரிவித்தது. கடந்த, 2009-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட வறட்சி நிவாரணத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவிக் கப்பட்டது. இதில், பல கிராமங்கள் விதார்பா, மரத்வாடா மாவட்டங்களைச் சேர்ந்தவை.