

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து வென்ற 4 எம்.பி.க்களுக்கும், ஆம் ஆத்மி கட்சி பயிற்சி அளிக்கவுள்ளது.
நாடாளுமன்ற விதிமுறைகள், நடந்து கொள்ளும், விதம், கேள்வி எழுப்பும் முறை, சரியான கேள்விகளை சரியான தருணத்தில் எழுப்புதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
டெல்லியின் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்தபோது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சிலர் நடந்து கொண்டதை பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களே கேலி செய்ய நேரிட்டது.
ஆம் ஆத்மி கட்சியில் வென்ற 4 எம்.பி.க்களில் 3 பேர் நாடாளுமன்றத்திற்குப் புதியவர்கள். ஒருவருக்கு குறைந்த கால அனுபவமே உள்ளது.
தரம் வீர காந்தி, பகவத் மான், சாது சிங், ஹர்ஜிந்தர் சிங் கல்சா ஆகிய 4 எம்.பி.க்களுக்கும் டெல்லி மற்றும் பஞ்சாபில் பயிற்சி அமர்வுகள் நடைபெறுகிறது.
முன்னாள் எம்.பி.க்கள் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளனர்.