

காவிரி விவகாரத்தால் மக்களவையில் அதிமுக, பாஜக எம்.பி.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பினார்.
அவர் பேசியபோது கர்நாட காவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
காவிரி விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அதுகுறித்து அவையில் பேசக்கூடாது என்று கர்நாடக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தம்பிதுரைக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் கோஷ மிட்டனர். இந்த விவகாரத்தால் அதிமுக, பாஜக எம்.பி.க்கள் இடையே அவையில் கருத்து மோதல் ஏற்பட்டது.