

கோவா மாநிலம் பனாஜியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி யில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவிஐபிகளுக்கு 12 ஹெலி காப்டர் வாங்குவதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர் பான ஆவணங்கள் காலவரிசைப் படி நாடாளுமன்றத்தில் 4-ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
எனவே, இதுகுறித்து இப்போது விரிவாக பேச விரும்பவில்லை.
இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற் காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்தியா வில் உள்ளவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாக 2013-ல் புகார் எழுந்தபோதும் முந்தைய அரசு அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கவில்லை.
ஆனால் கறுப்புப் பட்டியலில் வைத்ததாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அப்படியானால் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அவர்கள் கூறுவது பொய். பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகுதான் அந்த நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.