

மகாராஷ்டிராவில் மாட்டிறைச் சிக்கு முழுமையான தடை விதித்து, கடந்த ஆண்டு மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது, மாட் டிறைச்சி உட்கொள்வது, விற்பனை செய்வது, இருப்பு வைத்திருப்பது அனைத்தும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பல்வேறு தரப்பினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் எஸ்.சி.குப்தே ஆகியோர் கொண்ட ‘டிவிஷன் பெஞ்ச்’ இம்மனுக்களை விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.
அதில், ‘மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கலாம். ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவுக்குள் கொண்டு வரப்படும் மாட்டிறைச்சியை உண்பதோ, வைத்திருப்பதோ, விற்பதோ சட்டப்படி குற்றமாக கருதக் கூடாது’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.