

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிஹார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா ஆகியோர் பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.
இவர்களுடன் முன்னாள் எம்.பி. ஜகதீஷ் சர்மாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜ ரான பின் லாலு செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதித் துறையை நான் மதிக்கிறேன். இதன் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். வரும் காலத்திலும் நீதிபதி உத்தர விடும்போதெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என்றார்.
கால்நடைத் தீவன ஊழல் தொடர் பாக லாலு மீது மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
1994-96-ல் பிஹாரில் பகல்பூர் மற்றும் பங்கா கருவூலங்களில் இருந்து சட்டவிரோதமாக ரூ.46 லட்சம் பெற்ற வழக்கில் லாலு, மிஸ்ரா, சர்மா உள்ளிட்ட 34 பேரும் ஆஜராக சிபிஜ நீதிமன்றம் வியாழக் கிழமை உத்தரவிட்டது. அதன்படி லாலு உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.