

நேபாள சுற்றுலாத் துறை அமைச்சக அதிகாரி கியானேந்திர ஷ்ரேஸ்தா கூறியதாவது:
இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ் பால், கடந்த சனிக்கிழமை 8,850 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். அங்கிருந்து இறங்கி வரும்போது ஹிலாரி ஸ்டெப் ஐஸ் வால் பகுதியில் நிலைகுலைந்தார். அவரை உடனடியாக கீழே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
மலையேறிக் கொண்டிருந்த 4 இந்தியர்கள் கடந்த சனிக்கிழமை மாய மாயினர். இதில் ஒருவர்தான் சுபாஷ் பால். இதுபோல சுனிதா ஹஸ்ரா என்பவர் ஞாயிற்றுக்கிழமை மீட்கப் பட்டார். மேலும் பரேஷ் ஷா மற்றும் கவுதம் கோஷ் ஆகிய 2 இந்தியர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இதுவரை இந்த ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 பேர் பலியாயினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.