

அசாமில் பாஜக ஆட்சியைப் பிடித்தபோதும் தமிழகம், மேற்கு வங்கத்தில் மோடி மந்திரம் எடுபடவில்லை என அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா விமர்சித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக அசாமில் ஆட்சி யைப் பிடித்த மகிழ்ச்சியில் பாஜக உள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
அசாமில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு, வெற்றியைப் பதிவு செய்துள்ளது பாஜக. ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை, தமிழகத்தில் ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியவில்லை. கேரளாவில் இடதுசாரிகளையும் வீழ்த்த முடியவில்லை.
மாநிலக்கட்சிகளை அவர் களின் கோட்டையில் பாஜகவால் வீழ்த்த முடியவில்லை என்பது தான் இதன் அர்த்தம்.
காங்கிரஸ் காற்றில் கரைந்து விட்டதாக மக்கள் கூறுகின்றனர். அசாமைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பாஜகவுக்கு என்ன நேர்ந்திருக்கிறது?
கேரளாவில் காங்கிரஸும், இடதுசாரிகளும் மாறி மாறி வெற்றி பெறுகின்றனர். இம் முறை இடதுசாரிகள் வென் றுள்ளனர். இங்கு முதல்முறை யாக சட்டப்பேரவை தேர்தலில் கணக்கைத் தொடங்கிய நல்ல நாளுக்காக மட்டுமே பாஜக ஆறுதல் அடைய லாம். இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.