சத்தீஸ்கரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

சத்தீஸ்கரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்
Updated on
1 min read

ராய்ப்பூர்: நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு பலதரப்பிலும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்தை வெளியிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கன்னையா லால் என்பர் கடந்த மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இதேபோல் சத்தீஸ்கர் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா ஜெகத் (22) என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து ஒன்றை கடந்த மாதம் 12-ம் தேதி பகிர்ந்துள்ளார். தற்போது அவருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக ராஜா ஜெகத் என்பவர் போலீசில் புகார் செய்தார். கொலை மிரட்டல் வந்த இரு போன் எண்களும் எப்.ஐ.ஆர்-ல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து விசாரணை நடக்கவுள்ளதாக பழைய பிலாய் நகர காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்வாஸ் சந்திரகர் கூறியுள்ளார். மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்கள் ராய்ப்பூரைச் சேர்ந்த காசிஃப் மற்றும் ரிதிகா நாயக் என்பவரது பெயரில் உள்ளன. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in