உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாக். தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு

உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாக். தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு
Updated on
1 min read

உதய்பூர்: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையாலால் கருத்து பதிவிட்டார். இதையடுத்து அவரை 4 நாட்களுக்கு முன்பு 2 பேர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவுஸ் முகம்மது, ரியாஸ் அத்தரி ஆகியோருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான தவாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 2 கொலையாளிகளில் ஒருவருக்கு நேரடியாகவே பாகிஸ்தான் உடன் தொடர்பு இருக்கிறது. அவரது செல்போனில் சுமார் 10 பாகிஸ்தான் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொலையாளிகளில் மற்றொருவரான முகமது ரியாஸ் அன்சாரி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர். கன்னையா லாலைக் கொல்வதற்கு முன், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான வீடியோக்களையும் பார்த்து உள்ளனர். இந்தத் தகவலை ராஜஸ்தான் மாநில அரசு அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in