பிரதமர் மோடியை கண்டு கேசிஆர் பயப்படுகிறார் - பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து

பிரதமர் மோடியை கண்டு கேசிஆர் பயப்படுகிறார் - பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து
Updated on
1 min read

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை தொடங்கியது. இக்கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.

பிரதமர் மோடியை வரவேற்க அங்கிருந்த கோலாட்டம் கலைஞர்களுடன் இணைந்து அவர் கோலாட்டம் ஆடி கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஹைதராபாத்தில் பிரதமர் மோடி வரும் வழியெல்லாம் ஆளும் டிஆர்எஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பல எதிர்ப்பு பலகைகளை பார்த்தேன். இதைப் பார்க்கும்போது தெலங்கானா முதல்வர் கேசிஆர் எவ்வளவு தூரம் பிரதமர் மோடியை பார்த்து பயந்துள்ளார் என்பதை உணர முடிந்தது.

3-வது முறையாக கேசிஆர் மோடியை வரவேற்க ஹைதராபாத் விமான நிலையம் வரவில்லை. இந்த செய்கைகள் எல்லாம் அவரின் பயத்தின் வெளிபாடுதான். தெலங்கானாவில் அடுத்தது பாஜக ஆட்சிதான். நாட்டையும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பிரதமர் மோடி பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இதை தற்போது மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்பதே பாஜகவின் கொள்கையாகும்" என திட்டவட்டமாக கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in