

அருணாச்சலப் பிரதேசத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக வீரர்கள் கடுமையாக நடந்து கொண்ட கேப்டனை கடுமையாக அடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவ மையத்தில் வழக்கமான பயிற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். அணிவகுப்பு நடந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஒரு வீரர் தெரிவித்தார். எனினும் அவருக்கு ஓய்வு அளிக்காமல் மருத்துவரை பார்த்துவிட்டு வரும்படி கேப்டன் தெரிவித்துள்ளார்.
வீரரை பரிசோதித்த மருத்துவ ரும் அவர் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் பயிற்சியில் பங்கேற்றபோது திடீ ரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட் டார். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சக வீரர்கள் 5 பேர் ராணுவ கேப்டனை சராமாரியாக அடித்து தாக்கியுள்ள னர். இதனால் பயிற்சி மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் கலகம் காரணமாக இந்த சண்டை நடைபெறவில்லை என்றும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.