

பிஹார் ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னதாக மாவோயிஸ்ட் அமைப்பை காரணம் காட்ட முடியாது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் டெல்லி - திப்ருகர் இடையே செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
இந்த ரயில் விபத்து பின்னணியில் மாவோயிஸ்டுகள் சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக முதற்கட்டமாக ரயில்வே துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விபத்து நடந்தது குறித்து விசாரணையே நடைபெறாத நிலையில், மாவோயிஸ்டுகள் சதி என்று கூறுவது சரியானது அல்ல. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
நான் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பேசினேன். விபத்தை தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக உத்தரவிடப்பட்டு, அவை நடந்து வருகின்றன. இதற்கு முன்பாக எந்த அமைப்பையும் குற்றம்சாட்ட வேண்டாம்" என்றார்.