

கோட்டயம் தேர்தல் முடிவுகள் வெளியான பின் நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது:
இது ஒரு எதிர்பாராத தீர்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அளவுக்கு தோல்வி அடைவோம் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தோல்விக்கு கட்சியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தான் பொறுப்பு.
அந்த வகையில் கூட்டணி தலைவர் என்ற முறையில் இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பேற்க வேண்டும். ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என கூற முடியாது. எனினும் தோல் விக்கான காரணம் குறித்து கட்சி மற்றும் கூட்டணி அளவில் விவாதிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலால் துறை அமைச்சர் கே.பாபு, வருவாய் துறை அமைச்சர் ஆடூர் பிரகாஷ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க கூடாது என மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் முதல்வர் உம்மன் சாண்டியும், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவும், அதை ஏற்காமல் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.