மணிப்பூர் நிலச்சரிவு: உயிரிழந்தோர் 20 ஆக அதிகரிப்பு

மணிப்பூர் நிலச்சரிவு: உயிரிழந்தோர் 20 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கனமழை காரணமாக, நேற்று முன்தினம் தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட ஏராளமானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது. நேற்று மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டு இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியில் அசாம் ரைபிள்ஸ், துணை ராணுவப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in