

பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங், மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், இணையம் மூலம் பொதுமக்கள் தங்கள் குறை களை பிரதமரிடம் தெரிவிக்க, மையப்படுத்தப்பட்ட இணைய வழி பொதுமக்கள் குறைதீர் மற்றும் கண்காணிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம், பொதுமக்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 61,919 மனுக்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வந்து சேர்கின்றன. இதில், 11,028 மனுக்கள் டெல்லியுடன் தொடர்புடையவை.
கடந்த 5-ம் தேதி நிலவரப்படி, பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற 7,18,241 மனுக்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன. 2,72,466 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
பிரதமருக்கு வரும் மனுக்கள் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காவல்துறை விவகாரங்கள், நிதி சேவைகள், ஊழல் அல்லது முறைகேடு புகார்கள் மற்றும் கல்வி தொடர்பானவையாக உள்ளன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.