

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணிக்கு இந்த முறை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து ‘ட்விட்டரில்’ கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘‘மேற்குவங்க மக்கள் அளித்த தீர்ப்பை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றிக்காக பாடுபட்ட கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தோல்விக்கான காரணம் குறித்து ஆராயவுள்ளோம்’’ என்றார்.