Last Updated : 18 May, 2016 01:20 PM

 

Published : 18 May 2016 01:20 PM
Last Updated : 18 May 2016 01:20 PM

நாட்டில் 4 மாநிலங்களில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

நம் நாட்டில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக தனித் துறைகள் செயல்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கை யில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

நாட்டில் சம உரிமை பெற்ற குடிமகன்களாக மாற்றுத்திறனாளி கள் இருந்தாலும் அவர்களுக்கான வாழும் வசதி பல மாநிலங்களில் இல்லாத நிலை உள்ளது. இவர்கள் நலனுக்காக உத்தரப்பிரதேசம், ஒடிசா, கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டுமே தனித் துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறை கர்நாடகாவில் மட்டும் மாற்றுத்திறனாளிகளுடன் சேர்த்து மூத்த குடிமக்கள் நலனுக் காகவும் செயல்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் சமூகநலத் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலப் பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.

நாட்டின் 36 மாநிலங்களில் 19-ல் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனி ஆணையர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். எஞ்சிய 17 மாநிலங்களில் மாற்றுத்திறனாளி களுக்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரும் பாலான மாநிலங்களில் இப்பணி யிடம் காலியாக, அதாவது வேறு அதிகாரியிடம் கூடுதல் பொறுப்பாக உள்ளது. இது தொடர்பாக சமீபத் தில் ஆய்வு மேற்கொண்ட நாடாளு மன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

இது குறித்து சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ரமேஷ் பைஸ் ‘தி இந்து’விடம் கூறும்போது, “மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சலுகை கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த அவர்களுக்கான தனித் துறை ஒவ்வொரு மாநிலத்திலும் அவசியமாகிறது. இதை அமல் படுத்தாத மாநிலங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்தின் 41-வது பிரிவை மேற்கோள்காட்டி கடிதம் எழுதியுள் ளோம். இப்பிரிவின்படி மாற்றுத்திற னாளிகள் மேம்பாட்டுக்கு தனித் துறை அமைப்பது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பு ஆகும். இதனை குறிப்பிட்ட மாநில அரசுகளி டம் வலியுறுத்தும்படி மத்திய அரசிட மும் கோரியுள்ளோம்” என்றார்.

மாற்றத்திறனாளிகளுக்கு என மத்திய அரசிலும் தனியாக ஒரு துறை இல்லாமல் இருந்தது. இத னால் இவர்களுக்கான பல திட்டங் களை முறையாக அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலை யில் தற்போது தனித் துறை தொடங் கப்பட்டு, அத்துறை சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மாற்றுத்திறனாளிகள் நலனில் மத்திய அரசு காட்டும் அக்கறை சற்று கூடி இருப்பதாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x