Last Updated : 12 May, 2016 10:52 AM

 

Published : 12 May 2016 10:52 AM
Last Updated : 12 May 2016 10:52 AM

சட்டத்தை மீறும் அரசியல்வாதிகளின் பாதுகாவலர்கள்

பிஹாரில் ஆதித்ய சச்தேவ் என்ற மாணவரை ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரின் மகன் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் அவரது பாதுகாவலரான ராஜேஷ் ரஞ்சனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை போல், பிஹாரில் அரசியல்வாதிகளின் பாதுகாப்புக் காக நியமிக்கப்பட்ட போலீஸார் பலர் சட்டத்தை மீறுவது அதிகரித்து வருகிறது.

வட மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்பை அரசியல்வாதிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவ மாகவும் கருதுகின்றனர். இந்த பாது காவலர்கள் பல நேரங்களில் தாம் பணியாற்றும் அரசியல்வாதி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது பிஹாரில் அதிகரித்து வருகிறது. பிஹாரின் கயா நகரில் கடந்த சனிக்கிழமை ஆதித்ய சச்தேவ் என்ற பிளஸ் 2 மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது வாகனத்தை முந்திச் சென்றதாக ராக்கி என்கிற ராகேஷ் ரஞ்சன் என்ற இளைஞர் இவரை சுட்டுக் கொன்றார்.

இந்த சம்பவத்தின்போது ராக்கி யுடன் அவரது தாயார் மனோரமா தேவியின் பாதுகாவலரான ராஜேஷும் உடன் இருந்தார். பிஹார் மேல்சபையின் ஐக்கிய ஜனதா தள உறுப்பினரான மனோரமா தேவி யின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவலரான ராஜேஷ் பணி அமர்த்தப்பட்டிருந்தார். இவர் சட்ட விரோதமாக மனோரமாவின் மகனு டன் சென்றதுடன், அவருடன் சேர்ந்து மாணவர் ஆதித்ய சச்தேவுடன் தகராறும் செய்துள்ளார். இதனால் அவர் சட்டத்தை மீறியதுடன், கண் முன் நடந்த கொலையை தடுக்க முற்படவில்லை என்று கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். ராஜேஷை போலவே பிஹாரில் அரசியல்வாதிகளின் பாதுகாவலர்கள் சட்டத்தை மீறுவது அதிகரித்து வருகிறது.

பிஹாரின் கோபால்பூரை சேர்ந்த ஐஜத கட்சிப் பிரமுகரான கோபால் மண்டல் என்பவர் கடந்த மாதம் பாங்கா என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அப் போது அவர்களின் வாகனத்துக்கு வழிவிடவில்லை என்று ஒரு டிராக்டரை அவரது பாதுகாவலர் வழிமறித்தார். பிறகு அதன் ஓட்டு நரை பொதுமக்கள் முன்னிலையில் பலமாக அடித்து காயப்படுத்தினர். இது தொடர்பாக கோபால் மற்றும் அவரது பாதுகாவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கு முன் ஐஜத கட்சியின் எம்எல்ஏ.வும் முன்னாள் அமைச்சரு மான பிமா பாரதி, போலீஸ் காவலில் இருந்த தனது கணவரை காவல் நிலையத்தில் புகுந்து சட்டவிரோதமாக மீட்ட சம்பவம் நடந்தது. புருனியா மாவட்டம், ருபாலி என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில வருடங்களுக்கு முன் விஜய் கிருஷ்ணா என்ற முன்னாள் எம்.பி. யின் பாதுகாவலர், ஐஜத கட்சியை சேர்ந்தவரை கடத்திக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

பிஹாரில் ராப்ரி தேவியின் ஆட்சிக் காலத்தில் அவரது கட்சி எம்எல்ஏ.க்களின் பாதுகாவலர்கள் சிலர் சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபட்டிருந்தனர். ராப்ரியின் சகோதரரான சாது யாதவுக்கு கூர்கா பட்டாலியன் சார்பில் பாது காவலர்கள் நியமிக்கப்பட்டிருந் தனர். இவர்கள், தேர்தலின்போது சாது யாதவுடன் வாக்குச்சாவடி சென்று, அங்கிருந்த ஐஏஎஸ் உள் ளிட்ட அதிகாரிகள் பலரை அடித்து உதைத்ததாக புகார் எழுந்தது.

இதுபோல் பிஹார் அமைச்ச ராக இருந்த லலித் யாதவ், தனது பாதுகாவலருடன் சேர்ந்து லாரி ஓட்டுநர் ஒருவரை பிடித்து வைத்து துன்புறுத்தி வந்ததாக வழக்கு பதிவானது. இதில் லலித்துடன் அவரது பாதுகாவலரும் போலீஸா ரால் தேடப்பட்டு வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x