Published : 20 May 2016 10:53 AM
Last Updated : 20 May 2016 10:53 AM

கேரளாவில் நடிகர்கள் ஆதிக்கம்

கேரளவில் கடந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் போட்டியிட்ட நடிகர் இன்னொசென்ட், காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோவை தோற்கடித்தார். இதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து கூட்டணிகளும் மலையாள நடிகர்களை களம் இறக்கின.

கொல்லம் தொகுதியில் இடது சாரிகள் சார்பில் போட்டியிட்ட நடிகர் முகேஷ், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுரஜ் ரவியை விட 17,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

பதனபுரம் தொகுதியில் இடது சாரிகள் சார்பில் போட்டியிட்ட நடிகர் கே.பி. கணேஷ் குமார் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சக நடிகர்கள் ஜெகதீஷ்குமார் மற்றும் ரகு தாமோதரன் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x