

புவி வெப்பமயமாதல் மற்றும் தீவிரவாதம் ஆகிய பிரச்சினைகளிலிருந்து விடுபட மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் சிம்ஹஸ்த கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சாதுக்களும் லட்சக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று ஷிப்ரா நதியில் புனித நீராடி வருகின்றனர்.
கும்பமேளாவை ஒட்டி ‘வாழ் வியலுக்கான சரியான பாதை’ என்ற பெயரில் 3 நாள் சர்வதேச கருத் தரங்கு நடைபெற்றது. இதில் புவி வெப்பமயமாதல், வேளாண் மைக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், இயற்கை உரங்க ளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதன் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்ஹஸ்த கும்பமேளா தொடர்பான 51 அம்ச தீர்மானத்தை மூவரும் வெளியிட்டனர். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த உலகம் இரண்டு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதாவது ஒருபுறம் புவி வெப்பமயமாதலும் மற்றொருபுறம் தீவிரவாதமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இவற்றுக்கு என்னதான் தீர்வு? இவற்றுக்கான மூல காரணங்கள் என்னவாக இருக்க முடியும்.
எளிமையாக சொல்ல வேண்டு மானால், மெத்தனப் போக்கு அல்லது உங்கள் வழியைவிட எங்கள் வழிதான் சிறந்தது என்ற மனநிலைதான். இந்தப் பிரச்சினை கள்தான் உலக நாடுகளுக்கிடையே மோதலை உருவாக்குகிறது. எனவே, இதுபோன்ற மனநிலையி லிருந்து விடுபடுவதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்.
இந்தியர்களுக்கு மரபு ரீதியாக பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய திறமை இருக்கிறது. கீழ்படிதலுக் காக இந்தியர்கள் ராமரை வழிபட்டு வருகின்றனர். தந்தைக்கு விசுவாசமாக உள்ளனர். எனவே தான் இந்தியர்களுக்கு பிரச்சி னையை நிர்வகிக்கும் திறன் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித் தார்.