

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் என் வீட்டுக்கு ஒருவர் வந்து பாட்டு சொல்லி தந்தார். அவர் வயதானவர், நாகரிகமான வர். நாட்டின் மீது அளவற்ற பற்று கொண்டவர். ஊழல், நமது அரசி யல் தலைவர்கள் மீதான அவரது எண்ணம் மிகவும் வலிமையானது. ஒரு மாதம் பாட்டு சொல்லி தந்த பிறகு, அவருக்கு கட்டணம் வழங்க காசோலையை பூர்த்தி செய்தேன். அவரோ, ‘வேண்டாம், பணமாக கொடுங்கள்’ என்றார். அவர் பல ஆண்டுகளாக பாட்டு சொல்லி கொடுத்து வருகிறார். நாட்டின் மீது பற்று கொண்டுள்ள அவர், அந்த நாட்டின் அரசுக்கு கிடைக்க வேண் டிய தன்னுடைய வரியை வழங் காமல் ஏமாற்றுவதால் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இந்தியாவை பொறுத்த வரையில் வித்தியாசமான முரண் இருக்கிறது. இந்தியர்கள் அதிக தேசப்பற்று உள்ளவர்களாக உள்ளனர். ‘பாரத மாதா கீ ஜே’ என்று முழக்கமிட தயாராக இருக்கின்றனர். ஆனால், அவர் கள் நாட்டை மிகச் சிறந்ததாக மாற்றுவதற்கு பயன்படக் கூடிய வரி உட்பட அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த விரும்புவதில்லை.
பாகிஸ்தானுக்கு செல்பவர்கள் விமான நிலையத்தில் ஒரு விஷ யத்தை கவனிக்கலாம். வரி செ லுத்துபவர்களுக்கு அங்கு குடி யுரிமை சான்றிதழ் வழங்க தனி வரிசை இருக்கும். இந்த சிறப்பு சலுகையை பெற மிக அரிதாக சிலரே இருக்கின்றனர். இந்தி யாவில் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மிகவும் வருந் தத்தக்கதாக உள்ளது.
* இந்தியர்களில் ஒரு சத வீதம் பேர்தான் வருமான வரி செலுத்துகின்றனர். 2 சதவீதத் தினர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். ஆனால், அமெரிக்காவில் 45 சதவீதத்தினர் வரி செலுத்துகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் (நமது பிரிக்ஸ் நாடுகள் குழுவில் உள்ளது) 10 சதவீதத்தினர் வரி கட்டுகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்த சத வீதம் உயர்வதற்கான அறிகுறியே தெரியவில்லை.
* இந்தியாவில் வரி அதிக மாக இருக்கிறது என்பதற்காக இந்தியர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கவில்லை. கடந்த 1965-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை இந்தியாவின் வருமான வரி குறித்த ஆய்வில், ‘‘வருமான வரி சோதனைகள், அபராதங்கள், தண்டனைகள் மிகமிக குறைவான பலனையே தந்தன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* ‘‘வேளாண் தொழிலுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது. இந்திய வருவாய்க்கு விவசாயிகள் எந்த பங்களிப்பும் வழங்குவதில்லை’’ என்று உயர்தட்டு மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், பெ ரும் பாலான விவசாயிகள் பாவம் ஏழைகள்தான்.
ஆயிரக்கணக்கான ஆண்டுக ளாக விவசாயிகளிடம் இருந்து தான் வரிகளை வசூலித்துள்ளனர். அதனால், சுதந்திர இந்தியாவில் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கினால், அது அவர்களுக்கு நல்லது செய்வதாகாது.
* ஐரோப்பிய மற்றும் வட அமெ ரிக்க நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் 34 சதவீதமாக உள்ளது. டென்மார்க் போன்ற வளர்ந்த நாடுகளில் இது 50 சத வீதமாக உள்ளது. இந்தியாவில் வெறும் 10 சதவீதமாக உள்ளது. இந்த சதவீதத்தை அதிகரிக்காத வரையில் இந்தியா முன்னேற்றம் காண முடியாது.
* மொத்த வரி வருவாயில், நேரடி வரி மட்டும் பாதியாக உள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு 51 சதவீதம் வரி வருவாய் என்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் குறைவு. இதன் பொருள் என்ன வென்றால், மறைமுக வரி அதி கரித்துள்ளது என்பதுதான். இது துரதிருஷ்டவசமானது. ஏனெனில், ஏழைகள் உட்பட எல்லா இந்தி யர்களையும் பாதிக்கக் கூடியது மறைமுக வரிகள். பொருட்களுக் கும் சேவைகளுக்கும் அவர்கள் வரி செலுத்துகின்றனர். இதை குறைக்க வேண்டுமானால், உயர் தட்டு மக்கள் வரி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்.
* இந்தியாவில் கீழ்மட்ட அளவில் எந்தளவுக்கு வரி தவிர்க்கப்படுகிறதோ, அந்தளவுக்கு பணக்காரர்களும் வரியை தவிர்ப்பது அதிகமாக உள்ளது. வரி ஏய்ப்பில் படித்தவர்கள், படிக் காதவர்கள் என்ற வித்தியாசம் எதுவும் இல்லை. நகர்ப்புறங்களில் வசிக்கும், படித்த, வரி செலுத்து பவர்களை ‘நடுத்தர வர்க்கத்தினர்’ என்று பல ஆண்டுகளாக கூறி வரு கிறோம். இந்த எண்ணிக்கைதான் ஒரு சதவீதம். எனவே, அவர்களை நடுத்தர வர்க்கம் என்று குறிப்பி டக் கூடாது. அவர்கள் மேல்தட்டு மக்கள். மற்ற இந்தியர்கள் வரி செலுத் தாமல் இருக்கும் வரை, கறுப்பு பணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நமது நாட்டை வலி மையானதாக்க வேண்டுமானால், நமது நடவடிக்கைகள் மாற வேண் டும். இந்தியாவில் வரி செ லுத்து வோரில் மாத சம்பளக்காரர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அவர் களுடைய வரி பிடித்தம் செய்யப் படுகிறது. எனவே, வரி ஏய்ப்புக்கான வழியே இல்லை.
ஒவ்வொருவரும் சுய ஆய்வை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பிரச்சினைக ளுக்கு எல்லாம் அரசை குறை சொல்ல கூடாது. இந்திய மக்க ளைத்தான் சொல்ல வேண்டும்.