மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா. படம்: பிடிஐ

அக்னிபாதை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் - பிரதமருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published on

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5 நாட்கள் விசாரணையை முடித்த ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் நேற்று கூடினர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது:

அமலாக்கத்துறை விசாரணையின்போது எனக்கு ஆதரவாக இருந்த கட்சித் தொண்டர்களுக்கு நன்றி. வேலை வாய்ப்பின்மையே நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. தற்போது வேலைவாய்ப்புக்கு கடைசி இடமாக இருந்த ராணுவத்தின் கதவும் மூடப்பட்டுவிட்டது. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்று பேசியவர்கள் ஒரு பதவியும் இல்லை, ஓய்வூதியமும் இல்லை என்கின்றனர். அக்னிபாதை திட்டம் மூலம் ராணுவத்தை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது போல அக்னிபாதை திட்டத்தை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in