

கேரளாவில் பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிராக டிரெண்டிங் ஆகி வருகிறது ‘போ மோனே மோடி’ என்ற ட்விட்டர் ஹேஷ்டேக்.
கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பழங்குடி மக்களின் குழந்தைகள் இறப்பு விகிதம் சோமாலியா நாட்டை ஒத்திருக்கிறது என்/று பிரதமர் மோடி கூறியதையடுத்து அவருக்கு எதிராக ட்விட்டரில் கடும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.
#PoMoneModi (போ மகனே மோடி) என்ற ஹேஷ்டேக் நடிகர் மோகன்லால் படமான நரசிம்ஹம் என்பதில் வரும் வசனம் போ மோனே தினேஷா என்பதை எதிரொலித்து உருவாக்கப்பட்டது.
இதில் பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராக சுமார் 35,000-த்துக்கும் மேற்பட்ட ட்வீட்கள் குவிந்துள்ளன.
ட்விட்டரில் அதிகம் பின் தொடரப்படும் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2-வது இடத்தில் இருக்கும் நிலையில் தற்போது போ மோனே மோடி பிரபலாமாகியுள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் தனது கடைசி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.
மேலும் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட #Somalia என்ற ஹேஷ்டேக்கும் 15,000 ட்வீட்களுடன் டிரெண்ட்டிங் ஆகி வருகிறது.
ட்விட்டரில் மோடியை காய்ச்சுபவர்களில் பிரதான பங்கு வகிப்பவர்கள் காங்கிரசார் மற்றும் இடது சாரிக் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.