

இத்தாலியைச் சேர்ந்த பின்மெக்கனிக்கா குழுமத்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் (இங்கிலாந்து) நிறுவனத்திடமி ருந்து விவிஐபி-கள் பயணிப்பதற் காக 12 ஹெலிகாப்டர் வாங்க இந்திய அரசு 2010-ல் ஒப்பந்தம் போட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற் காக, இந்தியாவில் உள்ளவர் களுக்கு இத்தாலி நிறுவனம் 10 சதவீத தொகையை லஞ்சமாக வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, இந்திய விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உட்பட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பான வழக்கில் இத்தாலியின் மிலன் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், இந்த ஒப்பந் தத்தைப் பெறுவதற்காக இந்தியர் களுக்கு லஞ்சம் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படை யில், விமானப்படை முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ் குஜ்ராலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தி னர். தியாகியிடம் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் வழக்கறிஞரும் ஏரோமேட்ரிக்ஸ் நிறுவன முன்னாள் உறுப்பினருமான கவுதம் கைதானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது நிறுவனத்தின் மூலம்தான் லஞ்சப் பணம் கைமாறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஐ சம்மன் அனுப்பியதையடுத்து, டெல்லி யில் உள்ள சிபிஐ தலைமை அலு வலகத்தில் கைதான் நேற்று ஆஜ ரானார். அப்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன இடைத் தரகர்கள் கார்லோ கெரோசா மற்றும் கைடோ ஹாஸ்கே ஆகியோ ருடன் உள்ள தொடர்பு, லஞ்சப் பணம் இவரது நிறுவனம் மூலம் கைமாறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தியதாகக் கூறப் படுகிறது.