

மேற்குவங்கம், அசாம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கள் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ளது.
இதையடுத்து கட்சியின் வெற்றி, தோல்வி மற்றும் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்க பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 11-ம் தேதி கூடுகிறது.
அப்போது கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புதுமுகங்களை அறிமுகப்படுத்த தேசிய தலைவர் அமித்ஷா முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தவிர, மத்திய அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகள் சிலரும் மாற்றப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதனால் பாஜக கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.