நாட்டிலேயே முதன்முறை: வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாரணாசியின் விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிப்புகள் வெளியாகின்றன. பயணிகளுக்காக இதை நாட்டிலேயே முதன்முறையாக அமலாக்கப்பட்டுள்ளது.

தெய்வீக நகரமான வாரணாசியின் பாபத்பூரில் இருப்பது லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இதனுள் சமீப நாட்களாக கோவிட் வைரஸ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

தொடர்ந்து சமஸ்கிருத மொழியில் பயணிகளுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. இதற்கு முன் அங்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அறிவிப்புகள் வெளியாகி வந்தன.

இது குறித்து வாரணாசி விமான நிலைய இயக்குநரான ஆர்யமா சன்யால் கூறும்போது, ”வாரணாசியின் சிறப்புக்கு உரியது சமஸ்கிருத மொழி. இம்மொழியில் அறிவிப்புகளை கேட்கும் பயணிகள் தாம் சமஸ்கிருதத்தின் தலைநகருக்கு வந்தது போல் உணர்வார்கள்.

நம் நாட்டின் கலாசார தலைநகரான வாரணாசியில் சமஸ்கிருந்த அறிவிப்புகளை கேட்டு பொதுமக்கள் மகிழ்கின்றனர். இதன்மூலம், வெளிநாடுகளில் இருந்தும் வரும் பயணிகள் சமஸ்கிருத மொழியுடன் வாரணாசிக்கு இருக்கும் உறவை அறிந்து கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in