Published : 29 Jun 2014 09:54 AM
Last Updated : 29 Jun 2014 09:54 AM

1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ?

இரண்டாம் உலகப்போரின்போது, 1944-ம் ஆண்டில் இம்பால், கோஹி மாவில் ஜப்பானியர்களை எதிர்த் துப் போரிட்டு வெற்றியை தேடித் தந்த இந்திய வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படு கிறதா என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த ஜூன் மாதத்துடன் அப்போர் முடிவடைந்து 70 ஆண்டு கள் ஆன நிலையில், அதில் கள மாடி உயிர் துறந்த வீரர்கள் குறித்து எந்தவிதமான செய்தியை யும் ஊடகங்களில் காண முடிய வில்லை. எது எதற்கோ சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி சேனல்கள், இந்த போர் குறித்து ஓரிரு வார்த்தைகள் கூட குறிப்பிடவில்லை.

ஆனால், ஆறுதல் அளிக்கும் விதமாக பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதிநிதி களும், இப்போரில் பங்கேற்ற சில வீரர்களும் இணைந்து சனிக் கிழமை நினைவு நிகழ்ச்சிக்கு இம்பாலில் ஏற்பாடு செய்திருந்த னர். இதில் இந்திய ராணுவத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பொதுவாக, நாடு சுதந்திர மடைந்ததற்கு முன்னதான ராணு வத்தின் செயற்கரிய செயல் பாடுகளுக்கு இப்போதைய ராணு வம் அந்த அளவிற்கு முக்கியத் துவம் அளிப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டு (பிரிட்டிஷ்) அரசுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகின்றனர்.

இப்போது இம்பாலில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சிக்குப் பிறகாவது, இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு ஆதரவாக போரிட்ட இந்திய வீரர் களின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவோம்.

வரலாற்றில் மிகவும் கொடூர மான போர்களில் இதுவும் ஒன்று என வர்ணிக்கப்படும் இம்பால், கோஹிமா போர்க் களத்தில் ஜப்பான் ராணுவத்தை இந்திய ராணுவம் எதிர்கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் முதல் முறை யாக வெளியிலிருந்து வந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் களம் இறங்கியது இந்தப் போரின்போதுதான்.

இந்தியாவைக் கைப்பற்ற 1944ம் ஆண்டு ஜப்பான் படை யினர் இம்பால், கோஹிமா ஆகிய பகுதிகளின் வழியாக நுழைய முயன்றனர். இந்த ஜப்பான் படையுடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப் படையும் இணைந்து செயல்பட்டது.

இவர்களை எதிர்கொள்ள ஒப்பீட் டளவில் மிகவும் குறைந்த எண் ணிக்கையிலான பிரிட்டிஷ் அரசின் இந்திய ராணுவத்தி னர் தொடக்கத்தில் அனுப்பிவைக் கப்பட்டனர். போரில் மிகவும் தீரத்துடன் போராடிய இந்திய ராணுவத்தின் 17, 20, 23-வது பிரிவு காலாட் படையினர், ஜப்பானின் 15-வது ராணுவப் பிரிவை இம்பாலில் சிதறடித்தனர். கோஹிமாவில் தாக்குதல் நடத்திய 15 ஆயிரம் ஜப்பான் வீரர்களை, வெறும் 1,500 பேரைக் கொண்ட முதலாவது அசாம் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் கள் எதிர்கொண்டனர். ஆக்ரோஷத் துடன் எதிர்தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், ஜப்பான் வீரர் களை நாட்டிற்குள் நுழைய விடா மல் இரு வாரங்கள் தாக்குப் பிடித் தனர். பின்னர் 161-வது பிரிவு இந்திய காலாட் படை அப்பகுதிக்கு வந்து, ஜப்பான் வீரர்களை விரட்டி அடித்தது.

கடும் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் 1944ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி, பர்மா பகுதிக்குள் பின்வாங்க ஜப்பான் முயன்றது. ஆனால், அதற் குள் ஏராளமான ஜப்பான் வீரர் கள் உயிரிழந்திருந்தனர். ஊன மடைந்தும், உடல் நலம் குன்றியும் அப்பகுதியில் சிக்கிக் கொண்ட ஏராளமான ஜப்பான் வீரர்கள், காப் பாற்றுவதற்கு ஆளின்றி பரிதாப மாக உயிர் துறந்தனர்.

இந்த சம்பவங்களையெல்லாம் ‘இம்பால் 1944’ என்ற பெயரில் ஜப்பான் திரைப்பட இயக்குநர் ஜுனிச்சி கஜியோகா படம் எடுத் துள்ளார். அவர் கூறுகையில், “போரில் உயிரிழந்த ஜப்பான் வீரர்க ளின் உறவினர்கள் சிலர், இப்போதும் இம்பாலுக்கு வந்து தங்கள் அன்புக்குரியவரின் எலும் பாவது கிடைக்காதா என்று தேடிச் செல்கின்றனர்” என்றார்.

லெப்டினென்ட் கர்னல் (ஓய்வு) அனில் பட் கூறுகை யில், “இரண்டாவது உலகப் போரின்போது நமது ராணுவம் பெற்ற வெற்றி மிகப்பெரிய சாதனை யாகும். ஆனால், யாரும் அதுபற்றி பேசாமல் இருப்பது வருத்தம் அளிக் கிறது. இப்போதைய மத்திய அர சாவது உரிய அங்கீகாரம் அளிக் கும் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x