Published : 20 Jun 2022 07:11 AM
Last Updated : 20 Jun 2022 07:11 AM

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் தோட்ட பணியாள‌ர் வீட்டில் சோதனை: கோடிக்கணக்கில் ரொக்கம், தங்கம் பறிமுதல்

கோப்புப்படம்.

பெங்களூரு: கர்நாடக மாநில ஊழல் தடுப்புத்துறை போலீஸார், 21 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 80 இடங்களில் சோதனை நடத்தினர்.

பெங்களூரு வடக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஜனார்த்தனம், துணைத் தேர்தல் ஆணையர் சித்தப்பா, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் தோட்ட பணியாளராக பணியாற்றும் சிவலிங்கையா மற்றும் நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றில் பணியாற்றும் பொறியாளர் உட்பட 21 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரொக்கம், தங்க,வைர நகைகள், வெள்ளி பொருட்கள், சொத்துஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் தோட்ட பணியாளராக பணியாற்றும் சிவலிங்கையாவின் பெங்களூரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவருக்குசொந்தமாக‌ மைசூரு, சென்னப்பட்டணா ஆகிய இடங்களில் இருக்கும் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். மேலும் கணக்கில் வராத தங்க, வைர, வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுதவிர பெங்களூரு, மைசூருஉள்ளிட்ட இடங்களில் இருக்கும்ஏராளமான சொத்து ஆவணங்களையும் கைப்பற்றினர். தோட்ட பணியாளர் ஒருவரின் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஊழல் தடுப்புத்துறை போலீஸார் கூறும்போது, ‘‘அரசு ஆவணத்தில் மட்டுமே சிவலிங்கையா தோட்ட பணியாளர்.ஆனால் தனக்கு இருக்கும் அரசியல்செல்வாக்கை பயன்படுத்தி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் பணியை பார்த்துள்ளார். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்வதில் பெரியஅளவில் கமிஷன் பெற்று கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அவரது வீடுகளில் சோதனை நடத்திய போது சிக்கிய பொருட்களை கண்ட அதிகாரிகள், ‘தோட்ட பணியாளருக்கு இவ்வளவு சொத்துக்களா?' என ஆச்சர்யம் அடைந்தனர். அவரது சொத்துக்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு முழுமையான விவரங்கள் வெளியாகும்'' என்றன‌ர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x