பறவை மோதியதால் நடுவானில் தீ பிடித்த விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு

பறவை மோதியதால் நடுவானில் தீ பிடித்த விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு
Updated on
1 min read

பாட்னா: பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவானில் தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மீது பறவை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, 185 பேருடன் பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு கிளம்பியது. சிறிது நேரத்தில் இடது பக்க இன்ஜினில் தீ பிடித்தது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு. பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

இதுகுறித்து பாட்னா விமான நிலைய இயக்குனர் கூறியதாவது:

பாட்னா விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமான மீது பறவை மோதியதால் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது. இதனால், விமானம் மீண்டும் பாட்னாவிலேயே தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த சுமார் 185 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர். தொழில்நுட்ப கோளாறு பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விசாரணைக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in