நன்கு ஆலோசித்த பிறகே அக்னி பாதை திட்டம் அமல் - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

நன்கு ஆலோசித்த பிறகே அக்னி பாதை திட்டம் அமல் - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: தனியார் ஊடக குழுமம் சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பேசியதாவது:

அக்னி பாதை திட்டம் மூலம் முப்படைகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் புரட்சிகரமான மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. ஆனால் சிலர் இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர்.

இந்த புதிய திட்டம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சுமார் 2 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகுதான் இந்த முடிவு எடுக் கப்பட்டது.

அரசியல் கட்சிகள் போராட் டம் நடத்துவதற்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. நல்ல திட்டங்களை எதிர்ப்பது நல்லதல்ல. நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியாக இருந்தாலும் நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் செயல்படுவோம். இவ்வாறு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in