

அமெரிக்காவில் எந்த ஒரு அவசர உதவியாக இருந்தாலும் 911 என்ற எண்ணில் அந்த நாட்டு மக்கள் தொடர்பு கொள்கின்றனர். அதேபோல இந்தியாவில் பல்வேறு அவசர கால உதவிக்கு ஒரே எண்ணை கொண்டு வரும் திட்டத் துக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
அழைப்பு வசதி துண்டிக்கப்பட்ட செல்போன் சிம் கார்டுகள் மூல மாகவும் லேண்ட்லைன் தொலை பேசி மூலமாகவும் இந்த சேவையைப் பெற முடியும்.
இந்த வசதி மூலம் ஒருவர் 112 எண்ணை அழைத்தால் அது சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எண் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்பின் ஓராண்டுக் குள் இதர அவசர தொலைபேசி எண்களின் சேவைகள் நிறுத்தப் படும். மேலும் எஸ்எம்எஸ் மூலமா கவும் 112 அவசர எண்ணை பொது மக்கள் தொடர்பு கொள்ளமுடியும். அதன்படி எஸ்எம்எஸ் அனுப்பிய வரின் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவருக்கு அருகில் உள்ள உதவி மையத்திடம் தகவல் தெரிவிக்கப்படும்.
அடுத்த ஆண்டு முதல் அனைத்து செல்போன்களிலும் அவசர கால அழைப்பு பொத்தான் வசதி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி செல்போன்களில் அவசர அழைப்பு பொத்தானை அழுத்தி னால் அது நேரடியாக அவசர உதவி மையத்துக்கு தகவல் அனுப்பிவிடும்.