Published : 18 Jun 2022 05:19 AM
Last Updated : 18 Jun 2022 05:19 AM
புதுடெல்லி: மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விவசாய சட்டத்தை விவசாயிகள் நிராகரித்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் நிராகரித்தனர். ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டதை வர்த்தகர்கள் நிராகரித்தனர். இப்போது அக்னி பாதை திட்டத்தை இளைஞர்கள் நிராகரித்துள்ளனர்.
நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குப் புரியவில்லை. ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரல்களைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை. தற்போது அக்னி பாதை திட்டத்தில் வயது உச்ச வரம்பு 21-லிருந்து 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்னி பாதை திட்டத்தின் விதிகளை பாஜக அரசு 24 மணி நேரத்தில் மாற்றியமைத்தது. இதன் மூலம் இத்திட்டம் இளைஞர்கள் மீது அவசர அவசரமாக திணிக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த திட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT