

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் ஒப்பந்த பேர ஊழல் தொடர்பாக, இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகியிடம் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் நேற்றும் விசாரணை நடத்தினர்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு எஸ்.பி.தியாகி ஆஜரானார். அப்போது, இடைத் தரகர்களுடன் தொடர்பு வைத்திருந் தது மற்றும் இத்தாலிக்கு சென்று வந்தது, ஹெலிகாப்டரின் பறக்கும் திறனை குறைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பிய தாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வழக்கில் தொடர் புடைய ஏரோமேட்ரிக்ஸ் நிறுவன வாரிய முன்னாள் உறுப்பினர் கவுதம் கைதானுக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி யிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபோல தியாகியின் உற வினர்களான சஞ்சீவ், ராஜீவ் மற்றும் சந்தீப் ஆகியோரிட மும் விசாரணை நடத்த சிபிஐ திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் தியாகியிடம் நேற்று முன்தினம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியில் வந்த தியாகியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும் போது, “இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னேன். நீங்கள் (பத்திரிகை யாளர்கள்) மனிதாபிமானமற்றவர் கள்” என்றார்.
இதனிடையே ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில், இடைத் தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த 6 நிறு வனங்களுடன் தொடர்பு வைத் திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அதாவது மைக்கேல் துபாயை தலைமையகமாகக் கொண்டு குளோபல் சர்வீஸஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து பெற்ற லஞ்சத்தை, 6 நிறுவனங்கள் மூலம் மற்றவர்களுக்கு பகிர்ந்தளித் ததாகக் கூறப்படுகிறது.
எனவே, குளோபல் சர்வீஸஸ் நிறுவனத்திடமிருந்து இந்த 6 நிறு வனங்களுக்கும் பணம் கைமாறி உள்ளதா என்பது குறித்த விவரங் களை வழங்குமாறு யுஏஇ அரசுக்கு அமலாக்கத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
இதுதவிர, துபாயின் லாயிட்ஸ் டிஎஸ்பி வங்கியில் உள்ள குளோபல் சர்வீஸஸ் நிறுவன கணக்குக்கு வந்த பரிவர்த்தனை விவரங்களை வழங்குமாறும் அமலாக்கத் துறை கேட்டுள்ளது.