மே.வங்கத்திலிருந்து டார்ஜிலிங்கை பிரிக்க சதி

மே.வங்கத்திலிருந்து டார்ஜிலிங்கை பிரிக்க சதி
Updated on
1 min read

மேற்குவங்கத்திலிருந்து கூச்பெஹர் மற்றும் டார்ஜிலிங் மாவட்டங்களைப் பிரிக்க பாஜக சதி செய்வதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

கூச்பெஹர் மாவட்டம் தின்ஹதாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற மம்தா பேசியதாவது:

அரசியல் சுயலாபத்துக்காக கூச்பெஹர், டார்ஜிலிங் மாவட்டங் களை மேற்குவங்க மாநிலத்தி லிருந்து பிரிக்க பாஜக முயற்சி செய்கிறது. குறிப்பாக இந்த மாவட்டங்களை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி போராடி வரும் பிரிவினைவாத அமைப்புகளை பாஜக ஊக்குவித்து வரு கிறது.

கடந்த 68 ஆண்டுகளாக வங்கதேசத்துடன் நீடித்து வந்த எல்லைப் பிரச்சினைக்கு மாநிலத்தில் இதற்கு ஆட்சி செய்த எந்த அரசும் தீ்ர்வு காணவில்லை. ஆனால், இந்தப் பிரச்சினைக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த ஆண்டு தீர்வு கண்டது. இதன்மூலம் எல்லைப் பகுதி மக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in