

மத்திய சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மத்தியில் மோடி யின் தலைமையிலான முன்மாதிரி அரசை அவர்கள் கண்டு வருகின்ற னர். கேரளாவிலும் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் காத்துள்ளனர்.
கேரள சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சாதகமான சூழலை நான் காண்கிறேன். இங்கு காங்கிரஸ் தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பல்வேறு ஊழல்களால் மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சி ஸ்தம்பித் துள்ளது. முதல்வரில் தொடங்கி அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் வரை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.
சிந்தாந்த குழப்பத்தில் மூழ்கி யுள்ள மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி மீதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் நட்டா கூறினார்.