

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 57 உறுப்பினர் பதவிகள் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் காலியாகின்றன. இதற்காக மத்திய தேர்தல் ஆணையம் வரும் ஜுன் 11-ல் தேர்தல் நடத்த உள்ளது.
மொத்தம் 15 மாநிலங்களில் காலியாகும் இந்தப் பதவிகளில் உ.பி.யில் அதிகபட்சமாக 11 இடங்கள் உள்ளன. இதில் சமாஜ்வாதி கட்சி 7, பகுஜன் சமாஜ் கட்சி 2, காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு உறுப்பினர் பதவிகளை வெல்லும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு, அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோரை கட்சி நிர்வாகிகள் பலரும் அணுகி வருகின்றனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சியின் தேசிய நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, “முலாயமின் முன்னாள் நெருங்கிய சகாவான அமர்சிங் தனக்கும், தனது தோழி ஜெயப்பிரதாவுக்கும் ‘சீட்’ பெற முயற்சி செய்கிறார். சில நாட்களுக்கு முன் காங்கிரஸில் இருந்து வந்து சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்களில் ஒரு வரான வேணி பிரசாத் வர்மா மற்றும் நாடு முழுவதிலும் இருந்து செய்தித் தொலைக்காட்சி அதிபர்கள் சிலரும் விடா முயற்சியில் ஈடுபட் டுள்ளனர். இதனால், தந்தையும், மகனும் விழிபிதுங்கி நிற்கின்றனர்” என்று தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் போல் இருந்த வர் அமர்சிங். இவருக்கு அக்கட்சி யின் மூத்த தலைவரான ஆசம்கானு டன் கடந்த 2009-ல் மோதல் ஏற்பட் டது. ராம்பூர் மக்களவை தொகுதி யில் நடிகர் ஜெயப்பிரதாவை வேட் பாளராக்க அமர்சிங் முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டது. இதில் ஆசம்கான் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அமர்சிங் கடந்த 2010-ல் கட்சியை விட்டு வெளியேறினார். தற்போது மீண்டும் ஜெயப்பிரதா வுடன் சமாஜ்வாதியில் சேர முயற்சிக்கிறார் அமர்சிங். உ.பி.யின் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் அமர்சிங்கின் தேவை யும் முலாயமுக்கு ஏற்பட்டுள்ளது.
மற்ற 3 கட்சிகளும் மாநிலங்கள வைக்கு தனது வேட்பாளர்களை முடிவு செய்து விட்டன. பகுஜன் சமாஜ் சார்பில் வெற்றிபெற வாய்ப் புள்ள 2 பதவிகளில், ஒன்றில் கட்சித் தலைவர் மாயாவதிக்கு நெருக்க மான சதீஷ் சந்தர் மிஸ்ரா நிறுத்தப் பட உள்ளார். மற்றொரு பதவிக்கு கட்சியின் தேசிய பொருளாளரும் தமிழருமான அம்பேத்ராஜன் நிறுத் தப்பட வாய்ப்புள்ளதாக தெரி கிறது.
பாஜக சார்பில் வெற்றிபெற வாய்ப்புள்ள 1 பதவிக்கு நாடாளு மன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறுமுறை தேர்வு செய்யப்பட உள்ள நக்வி, பாஜகவின் முக்கிய முஸ்லிம் முகம் ஆவார்.
காங்கிரஸ் சார்பில், இந்திரா காந்தி காலம் முதல் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மாவின் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தேர்வு செய் யப்படுவதில் பற்றாக்குறையாக உள்ள 4 வாக்குகளை அஜீத்சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம், அமைதி கட்சி, சுயேச்சைகள் என ஏதாவது ஒரு தரப்பிடம் பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.