

ரயில் கட்டண உயர்வை கண் டித்து கொல்கத்தா, மும்பை உள் ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
டிக்கெட் பெறாமல் பயணம் செய்யும் போராட்டத்தை நடத்தப் போவதாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ரயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதம் உயர்த்தவும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் உயர்த் தவும் மத்திய ரயில்வே துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள் ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
மேற்கு வங்க மாநில காங் கிரஸ் கமிட்டி தலைவரும், முன் னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சருமான அதிர் சவுத்ரி கூறும்போது, “முறைப் படி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப் படாமல், கொல்லைப்புறம் வழி யாக ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். தான் ஆட்சிக்கு வந்தால், நல்ல காலம் பிறக்கும் என்றார் மோடி. ஆனால், இப் போது மோசமான காலம்தான் தொடங்கியுள்ளது” என்றார்.
ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல் கத்தாவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சூர்ய காந்த மிஸ்ரா தலைமை வகித்தார். சூர்ய காந்த மிஸ்ரா கூறுகையில், “முன்பு நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருக்கும்போது ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதை வாபஸ் பெறக் கோரியும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதே மக்கள் விரோதக் கொள்கையை பிரதமரான பின்பு மோடி கடைப்பிடிக்கிறார்” என்றார்.
ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மும்பையில் புறநகர் ரயில்களில் டிக்கெட் பெறாமல் பயணம் செய்யும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தவுள்ளதாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலை வர் மானிக்ராவ் தாக்கரே அறிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “ரயில் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் தனது உண்மையான சொரூபத்தை மோடி தலைமையிலான அரசு வெளிப் படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவாணுக்கு பதிலாக புதிதாக ஒருவரை கட்சித் தலைமை நியமனம் செய்யப் போவ தாக தகவல் ஏதும் எனக்கு வர வில்லை” என்றார்.
காங்கிரஸின் கூட்டணி கட்சி யான தேசியவாத காங்கிரஸும் டிக்கெட் பெறாமல் புறநகர் ரயில் களில் பயணம் செய்யும் போராட் டத்தை நடத்தப்போவதாக அறிவித் துள்ளது. இதற்கான அறி விப்பை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் அறி வித்தார்.
தேசியவாத காங்கிரஸ் சார்பில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் முன்பு சனிக்கிழமை போராட்டம் நடை பெற்றது.