

ஆறு மாத குளிர்கால இடைவேளைக்குப் பின், பத்ரிநாத் கோயில் நேற்று அதிகாலை பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.
கோயிலின் தலைமை பூசாரி ஈஷ்வர் பிரசாத், நேற்று அதிகாலை 4.35 மணிக்கு கோயில் நடையை திறந்தார். இதைத்தொடர்ந்து ஏராள மான சடங்குகள் நடைபெற்றன.
நேற்று முதல் நாளில் மட்டும், 8,000 பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்ததாக பத்ரிநாத்-கேதார்நாத் சமிதி அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 9-ம் தேதி கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்ரிநாத் கோயிலும் திறந்திருப்பதால், வருடாந்திர ‘சார் தாம்’ யாத்திரை முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
நாட்டின் நான்கு கோடியில் உள்ள ராமேஸ்வரம், பூரி, பத்ரிநாத் மற்றும் துவாரகா ஆகிய 4 கோயில்கள் ‘சார் தாம்’ என்றழைக்கப்படுகிறது.