Published : 13 Jun 2022 06:15 AM
Last Updated : 13 Jun 2022 06:15 AM

முடிவுக்கு வருகிறதா பாஸ்டேக்? - சுங்கச்சாவடிகளில் விரைவில் புதிய வசூல் முறை அறிமுகம்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் புதிய வசூல்முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி, சுங்கச்சாவடியைக் கடந்துசெல்லும் ஒரு வாகனம்,அந்த நெடுஞ்சாலையில் முழுமையாக பயணிக்காவிட்டாலும் அந்தச் சாலைக்குரிய முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதாக உள்ளது.

இந்த நடைமுறைக்கு மாற்றாக, ஒரு வாகனம் நெடுஞ்சாலையில், எவ்வளவு தொலைவு பயணித்திருக்கிறதோ அதற்கற்றே வகையில் கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

வாகனம் சுங்கச்சாவடியுள்ள நெடுஞ்சாலையில் நுழைந்ததும் வாகனத்தில் பொருத்தப்பட் டிருக்கும் ஜிபிஎஸ், அந்த வாகனம்நெடுஞ்சாலையில் பயணிக்கும்தொலைவை கணக்கிட ஆரம்பித்துவிடும். வாகனம் நெடுஞ்சாலையில் பயணத்தை முடிக்கும்போது மொத்த பயணித்தத் தூரம் கணக்கிடப்பட்டு அதற்கான தொகை வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுவிடும்.

ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த வசூல்முறை நடைமுறையில் உள்ளது. தற்போது இந்தியாவில் இதற்கான பரிசோதனை முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x