சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்
Updated on
1 min read

ஜன்ஜ்கிர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜன்ஜ்கிர் சம்மா மாவட்டத்தில், மூடப்படாமல் கைவிடப்பட்ட, 80 அடி ஆழ்துளை கிணறு ஒன்றில், ராகுல் என்ற 11 வயது சிறுவன் தவறி விழுந்தான்.

அவனுக்கு காது கேட்காது, பேசவும் முடியாது. இவனை மீட்கும் பணியில், மாநில பேரிடர் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் 40 மணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் குஜராத்தில் இருந்து வந்த ரிமோட் கன்ட்ரோல் ரோபோ மீட்பு குழுவும் இணைந்துள்ளது.

சிறுவனை மீட்க ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஜேசிபி இயந்திரம் மூலம் மற்றொரு குழியும் தோண்டப்படுகிறது. மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளது.

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சிறுவனுக்கு வாழைப்பழம், ஜூஸ் வழங்கப்பட்டது. அவனுடன் பெற்றோர் தொடர்பில் உள்ளனர். ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. மீட்பு பணிகளை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகெல் கண்காணித்து வருகிறார்.

அவர் வீடியோ அழைப்பில், சிறுவனின் பெற்றோருடன் பேசினார். குஜராத்தில் இருந்து வந்துள்ள ரோபோ குழுவினருடன் சிறுவனை மீட்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in